அட்மின் பாஸ்வேர்ட் மறந்து போனால்
hirenbotcd.jpg

சமீபத்தில் ஒரு அனுபவம்.Windows XP-யில் தனது பயனர் பாஸ்வேர்டை மறந்துவிட்டார் நண்பர் ஒருவர், கூடவே அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்ட்டையும் மறந்துவிட்டார் . கணிணியின் உள் நுழைய முடியவில்லை. நம்மிடம் வந்தது அந்த லேப்டாப். உடனடியாக நினைவுக்கு வந்தது Hiren's BootCD 9.2 ஏற்கனவே அந்த iso கோப்பை சி.டி யாக எரித்து வைத்திருந்ததால் அது வழி பூட் செய்து எளிதாய் விண்டோஸ் எக்ஸ்பியின் அட்மின் பாஸ்வேர்டை ரீசெட் செய்யமுடிந்தது.
இதற்காக அந்த சிடியில் Active Password Changer 3.0.420 எனும் மென்பொருள் உள்ளது. அது windows NT/2000/XP/2003/Vista (FAT/NTFS) ஆப்பரேட்டிங் சிஸ்டம்களின் பயனர் கடவுசொல்களை Reset செய்ய உதவுகின்றது.

இந்த Hiren's BootCD மேலும் பல பயனுள்ள மென்பொருள்களை கொண்டுள்ளன.அதன் வரிசையை கீழ்கண்ட சுட்டியில் காணலாம்.

http://www.hiren.info/pages/bootcd

இந்த சி.டி-யானது நம்முலக குஜராத்தி இளைஞர்களான Hiren மற்றும் Pankaj-ன் கைவண்ணம். அடிக்கடி புதுப்புது பதிப்புகளை வெளியிடுகின்றார்கள்.
ஒரே ஒரு பிராப்ளம். இந்த சி.டியானது சட்டவிரோதமாக கருதப்படுகின்றது. ஏனெனில் அநேக விலைமிக்க மென்பொருள்கள் இதில் இலவசமாக பேக் செய்யப்பட்டு வருகின்றன.ஆகவே இது Warez வரிசையில் வருகின்றது. ஆகவே இதை இறக்கம் செய்ய ஹைரன் தனது இணைய தளத்தில் சுட்டி தருவதில்லை. இப்போதைக்கு ஒரு சுட்டி கீழே கொடுத்துள்ளேன்.தேவையெனில் இறக்கம் செய்து இப்போதே வைத்துகொள்ளுங்கள்.எப்போவேண்டுமானாலும் இது அழிக்கப்பட்டுப் போகலாம்.

http://rapidshare.com/files/46430466/Borneo.Hirens.BootCD.v9.2.rar

Unless otherwise stated, the content of this page is licensed under Creative Commons Attribution-ShareAlike 3.0 License